மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் | நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் ? மனம் திறந்த மோகன்லால் | செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்' | கடைசி படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்கை இணைக்க சொன்ன நடிகர் |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிக்க உள்ள படம் கண்ணப்பா. அவரது படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கிரீத்தி சனோனின் தங்கை நூபுர் சனோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட்-21ல் இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார் நூபுர் சனோன்.
கண்ணப்பா படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் அதற்கேற்றபடி தனது கால்சீட்டை மாற்றித் தர வழி இல்லை என்பதால் துவக்கத்திலேயே இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் நூபுர் சனோன். இந்த தகவலை படத்தின் ஹீரோ விஷ்ணு மஞ்சுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளவுடன், “கால்சீட் காரணமாக நூபுர் சனோன் வெளியேறுவது வருத்தமாக தான் இருக்கிறது. மீண்டும் அவருடன் வேறொரு படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதேசமயம் கண்ணப்பா படத்திற்கான புதிய கதாநாயகி தேடல் துவங்குகிறது” என்று கூறியுள்ளார்.