'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைக்கு வரும் அதே ஜனவரி 9ம் தேதி அன்று தெலுங்கில் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படமும் திரைக்கு வருகிறது. மாருதி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். திகில் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் உடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்திகுமார், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாவதாக சோசியல் மீடியாவில் ஒரு பரபரப்பு செய்தி வைரலாகி வந்தது. இதனால் பிரபாஸ் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆனால் தற்போது அப்படத்தை தயாரித்துள்ள நிறுவனம் அந்த தகவலை மறுத்துள்ளது.
அதில், 'தி ராஜா சாப் படத்தின் டிரைலர் முழுமையாக தயாரானதும் வெளியிடப்படும். சரியான வெளியீட்டு தேதி, நேரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் இன்று அப்படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக வெளியானது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.