ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்துள்ள கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்றாலும் நான்கு நாட்களில் இந்த படம் 400 கோடி வசூலை கடந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கூலி படத்தின் வசூல் எப்படி உள்ளது? என்பது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛கூலி படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு மற்ற ரசிகர்களும் தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மட்டுமின்றி விடுமுறை முடிந்த பிறகும் தியேட்டர்களில் 80 சதவீதம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் கூலி படம் குறித்து வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தின் வசூலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அதோடு விமர்சகர்கள் படத்தை குறை சொன்னாலும் ரசிகர்கள் எந்த குறையும் சொல்லவில்லை. ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றால் நேற்று திங்கட்கிழமை கண்டிப்பாக ரசிகர்களின் வருகை குறைந்திருக்கும். ஆனால் நேற்றும் அதற்கு முந்தைய மூன்று நாட்களைப் போன்றே கூட்டம் இருந்தது. அதனால் விமர்சனங்களை கடந்து கூலி படம் நல்ல முறையில் வசூலித்து வெற்றி பெறும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.