நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ரஜினிகாந்த் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த காலத்தில் அவரை குணசித்ர ஹீரோவாக்கி வெளிவந்த படம் '6லிருந்து 60 வரை'. ரஜினி, சங்கீதா நடித்திருந்தனர். ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை போராட்டம்தான் படம் எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.
இதேபோன்று ஒரு படம் பண்ண வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. அவரும் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த காலத்தில் குணசித்ர நாயகனாக நடித்த படம் 'தழுவாத கைகள்'. இதில் விஜயகாந்த் ஜோடியாக அம்பிகா நடித்தார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். இதுவும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை போராட்டம்தான்.
ஆனால் '6லிருந்து 60வரை' வெற்றி பெற்றது 'தழுவாத கைகள்' தோல்வி அடைந்தது. இரண்டு படங்களுக்குமே இளையராஜா இசை அமைத்தார். இரண்டு படத்தின் பாடல்களும் ஹிட்டானது. 6லிருந்து 60 வரை படத்தில் தெளிந்த நீரோடை மாதிரியான திரைக்கதை இருந்தது. தழுவாத கைகள் படித்தில் அளவிற்கு அதிகமான சோகம் இருந்தது. இதுவே வெற்றி தோல்விக்கு காரணம் என்பார்கள்.