விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

சினிமாவில் நடிப்பதற்கு குறும்படங்கள், ரீல்ஸ்கள், யு டியூப்கள் ஒரு பாதையாக இருப்பது போன்று இசை அமைப்பாளர்கள் ஆவதற்கு சுயாதீன ஆல்பங்கள், தனி பாடல் ஆல்பங்கள் பாதையாக இருந்திருக்கிறது.
இந்த பாதையில் சினிமாவிற்கு வரும் புதிய இசை அமைப்பளார்கள் பிரதீப் மற்றும் வேன் பவி. இருவரும் இணைந்து 'போக்ஸ்' என்ற லேபிளில் இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவர்களது ஆல்பங்களை திங் மியூசிக் வெளியிட்டு வருகிறது.
தற்போது இவர்கள் 'லவ் ஓ லவ்' படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளர் ஆகிறார்கள். இதில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தில் நடித்த பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா நடிக்கிறார்கள். இயக்குநர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். அவருடன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்குகிறார். இசை அமைப்பாளர்கள் அறிமுகம் குறித்து அவர் கூறும்போது “படத்தின் இசைக்கு புத்துணர்ச்சியான, உயிர்ப்பான எனர்ஜியைக் கொண்டு வருகிறார்கள் இந்த போக்ஸ் நண்பர்கள் . இளமையானதும் முதிர்ச்சியானதும், உணர்ச்சிப்பூர்வமானதும் விளையாட்டுத்தனமானதுமான அவர்களின் இசை, இந்த படத்தின் கதைக் கருவுடன் சிறப்பாக ஒத்துப்போகிறது. அவர்களின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் மனதை ஆழமாகத் தொடும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என்றார்.




