பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சமீபத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான கிங் ஆப் கொத்தா என்கிற திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறி ஆவரேஜ் என்கிற அளவிலேயே இடம்பிடித்தது. அதே சமயத்தில் வெளியான அவ்வளவு பிரபலம் இல்லாத இளம் நடிகர்கள் நடித்த ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் எண்பது கோடியை தாண்டி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இது ஒரு பக்கம் இருக்க அந்த படத்தில் துல்கர் சல்மான் புகைபிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் துல்கர் சல்மானின் புகை பிடிக்கும் காட்சி பற்றி குறிப்பிட்டு சிகரெட் க்கு பதிலாக துல்கர் சல்மான் வாயில் லாலிபாப் வைத்திருப்பது போல மாற்றி இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
அதற்கு இந்த படத்தின் இயக்குனரான அபிலாஷ் ஜோஷி அளித்துள்ள பதிலில் வார்த்தைகளாக இல்லாமல் விக்ரம் படத்தில் கமல் மற்றும் லியோ படத்தில் அர்ஜுன் ஆகியோர் சிகரெட் பிடிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மேல் லாலிபாப் என்கிற வார்த்தையை கேள்விக்குறியுடன் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர்கள் எல்லாம் இந்தப்படங்களில் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா என்று கிண்டலாக கேட்பது போல அவரது பதில் அமைந்துள்ளது.




