அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

மாமன் படத்தை அடுத்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார் சூரி. மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கும் இப்படத்தில் சூரியுடன் சுகாஸ், மகிமா நம்பியார், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், தனது இணையப்பக்கத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவு போட்டு உள்ளார் சூரி. அந்த பதிவில், ‛‛அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும் மன வலிமையாலும் சம்பாதிக்கப்படுகிறது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது'' என்று பதிவிட்டுள்ளார்.




