சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? | ஆர்யா 40வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில் | ‛சிறகடிக்க ஆசை' டிவி தொடர் நடிகை தற்கொலை |

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'டயஸ் இரே' திரைப்படம் 50 கோடியை தாண்டி வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் திரையுலகில் ஒரு நடிகையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன '2018' என்கிற படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் தான், 'தொடக்கம்' என்கிற படம் மூலமாக விசுமையாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்.
இதன் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து தனது தாய் சுசித்ராவுடன் சேர்ந்து கொல்லூர் மூகாம்பிகை தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்துள்ளார் விஸ்மாயா மோகன்லால். இந்த வருடம் மோகன்லாலுக்கு இரண்டு 200 கோடி வசூல் படங்களும் பிரணவுக்கு 50 கோடி வசூல் வெற்றி படமும் கிடைத்துள்ளதுடன் விஸ்மாயாகவும் நடிகையாக அறிமுகமாவதால் மோகன்லால் குடும்பமே உற்சாகத்தில் இருக்கிறது.