டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டப் படங்கள் வெளியாகும் போது அந்தப் படங்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை டிக்கெட் கட்டணங்களை தியேட்டர்களில் உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது.
மற்ற நாட்களில் உள்ள வழக்கமான கட்டணங்களை விடவும் சிங்கிள் தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கு கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு முறை புதிய படங்கள் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள் அதற்கு மனு அளிப்பதும், அரசு அதை பரிசீலித்து உயர்த்திக் கொள்ள ஆணை பிறப்பிப்பதும் வழக்கமாக இருக்கிறது.
டிக்கெட் கட்டணங்கள் உயர்வதால் புதிய படங்களைப் பார்க்க ரசிகர்கள் தயங்குகிறார்கள் என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. சில படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகக் கட்டணம் என்றாலும் வருகிறார்கள், மற்ற படங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள்.
எனவே, நிரந்தரமாக இதில் ஒரு மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளதாம். இது குறித்து ஆந்திர மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் கண்டுலா துர்கேஷ் இன்று திரைப்படப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தயாரிப்பாளர்களும், தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்களும் பாதிக்கப்படாத வகையில் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.