பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு, லால்பாக் பகுதியில் உள்ள புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது. 1970களில் கட்டப்பட்ட இந்தத் தியேட்டரில் 1100 இருக்கைகள் உள்ளன. காலத்திற்கேற்ப 4கே டிஜிட்டல், டால்பி அட்மாஸ் சவுண்டு என தன்னை மாற்றிக் கொண்டே வந்த இந்தத் தியேட்டர் நீதிமன்ற உத்தரவு காரணமாக மூடப்படுகிறது.
நிலத்தின் உரிமையாளர்கள், தியேட்டர் நிர்வாகத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் நில உரிமையாளர்கள் வெற்றி பெற்றனர். 2018ம் ஆண்டே நிலத்திற்கான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாம். அதன்பின் இருதரப்பும் நீதிமன்றத்தை அணுகியதால் தற்போது வரை வழக்கு நடந்து வந்தது.
இந்தத் தியேட்டரில் அதிகமான தமிழ்ப் படங்கள் வெளியாவது வழக்கம். ரஜினிகாந்த் நடித்த மூன்று படங்கள் இங்கு ஒரு கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
சிங்கிள் தியேட்டர்களை தற்போது நடத்துவது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. பெங்களூரு ஊர்வசி தியேட்டர் மூடப்படுவது அதன் சினிமா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.