தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் ராம்கோபால் வர்மா முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான சிவா திரைப்படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருவரின் திரையுலகப் பயணத்திலும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது 4 கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமீபத்தில் நாகார்ஜுனா கலந்து கொண்டபோது அவரிடம் சிவா திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் உங்கள் மகன்களில் நாகசைதன்யா, அகில் யார் அதற்கு பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த நாகார்ஜுனா என் பையன்கள் இருவருக்குமே அந்த தைரியம் இல்லை என்று வெளிப்படையாகவே பதில் அளித்தார்.
அதேசமயம் தமிழில் மலையூர் மம்பட்டியான் என்கிற படத்தில் நடித்த நடிகர் தியாகராஜன், அதே கதாபாத்திரத்தில் தன் மகன் பிரசாந்த்தை நடிக்க வைத்து அந்தப் படத்தை ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.