கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவரது படங்களில் தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று இசையமைத்து வருபவர் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. தற்போது ராஜமவுலியன் இந்த புதிய படத்திற்கும் இசைப் பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கான முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். குளோப் ட்ரோட்டர் என இந்த பாடலுக்கு வைக்கப்பட்ட டைட்டில் தான் படத்தின் டைட்டிலாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கீரவாணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்..
இது குறித்து அவர் கூறும்போது, “கீரவாணியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். என்ன ஒரு பவர்புல்லான டிராக் அது.. நான் கீரவாணி சாரின் முன்பாக அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமே அவர் விக்னேஸ்வர மந்திரத்தை சொல்லித்தான் எதையும் ஆரம்பிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் இப்போதும் அவர் ஆரம்பிக்க போகிறார் என்று நினைத்தால் ஆச்சரியமாக என் தந்தையின்(கமல்) பாடல் ஒன்றை பாடி அவர் துவங்கியது எனக்கு உண்மையிலேயே ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஆக இருந்தது” என்று கூறியுள்ளார்.