அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

புட்டபர்த்தி சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மகிமை சொல்லும் படமாக வருகிறது ‛அனந்தா'. இதை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சுஹாசினி, ஜெகபதிபாபு, நிழல்கள் ரவி, அபிராமி, ஒய்ஜிமகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் பா.விஜய் பேசியதாவது :
‛‛அனந்தா ஒரு திரை படைப்பு என்பதை விட இறை படைப்பு என்று சொன்னால் சரியாக இருக்கும். எனது திரைப்பயணத்தில் இறைவனை பற்றி நிறைய பாடல்களை எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே பாடல்கள், வசனம் எழுதியது இதில் தான். இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு நன்றி. இது ஒரு பட வாய்ப்பு என்பதை விட இது ஒரு காலத்தின் பதிவு, திரைக்காவியம். இதில் எனக்கும் ஒரு பங்களிப்பு இருப்பது இறைவன் அளித்த பாக்கிம். இசையமைப்பாளர் தேவா உடன் எப்போது பேசினாலும் ஆன்மிகம் சார்ந்து தான் எங்கள் உரையாடல் துவங்கும். இந்த படம் முழுக்கவே எங்களுக்குள் ஆன்மிக பயணமாக இருந்தது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் உடன் ஆரம்பத்தில் பழக கொஞ்சம் பயமாக இருந்தது. என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார், திடீரென நான் பாபாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு பாபா இப்படி சொன்னார் என்பார். அவர் பாபாவை நேசிப்பதை விட சுவாசிக்கிறார் என புரிந்து கொண்டேன். முதன்முறையாக எங்களை புட்டபர்த்திக்கு அழைத்து போய் அந்த மண்ணில் தான் ஆரம்பிக்கணும் என ஆரம்பித்தோம். இந்த படத்தின் மூலம் ஒரு ஆன்மிக சுற்றுலாவே சென்று வந்தது போன்று இருந்தது.
பாபாவின் பக்தர்கள் வீட்டிற்கு எல்லாம் சென்றோம். அவர்களை பார்த்தபோது பாபாவை அவர்கள் வணங்கவில்லை, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை வசனமாக எழுதுவது சவாலாக இருந்தது. நிபந்தனையற்ற பிரார்த்தனைகள் தான் பாபாவின் சன்னதியில் நிறைவேற்றப்படும். அவரை நம்பினால் கைவிடுவதில்லை என்பது தான் பாபா இந்த உலகத்திற்கு சொன்ன விஷயம். அது தான் இந்த திரைப்படம் சொல்லும் ஒரு சரித்திரம் ஆகும்''.
இவ்வாறு அவர் பேசினார்.