கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |

பிரபலமான பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தமிழ் படம் இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படமான தி எலிபண்ட் விஸ்பரர்ஸ், தி லஞ்ச்பாக்ஸ், மசான், பாக்லைட் மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் இது. குனீத் மோங்கா கபூர், அச்சின் ஜெயின் ஆகியோரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம்.
இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.