'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. காடுகளை மையப்படுத்தியும், காசியின் வரலாற்றை உள்ளடக்கிய கதையாகயும் உருவாகும் இப்படம் மகேஷ்பாபுவுக்கு 29வது படம். இதற்கிடையே இப்படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரித்விராஜ் 'கும்பா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டரும் வெளியிட்டனர்.
வரும் நவ.,15ல், இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த விழாவை ஓடிடி தளத்தில் மாலை 6 மணி முதல் நேரலையாக ஒளிப்பரப்ப உள்ளனர். படத்தின் போஸ்டரை 100 அடி உயரமுள்ள எல்இடி திரையில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில், எம்.எம். கீரவாணி இசையில் 'குளோப் ட்ரோட்டர்' என்ற பெயரில் படக்குழு ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் உணர்ச்சி பொங்க பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.