நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா. இதேபோன்று ஹிந்தியிலும் ‛ஆஷிகி -3' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க தொடங்கியதிலிருந்தே காதல் வதந்திகளில் சிக்கிக் கொண்டார். என்றாலும் அந்த காதல் செய்திக்கு மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி பாலிவுட்டுக்கு சென்ற வேகத்திலேயே பரபரப்பாக பேசப்படும் ஸ்ரீ லீலாவை, அடுத்தபடியாக ஆலியா பட்டுடன் போட்டியாக இணைத்து பாலிவுட் ஊடகங்கள் ஒரு செய்தி வெளியிட்டு வருகின்றனர். அதாவது, ஹிந்தியில் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ள ஆஷிகி-3 படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது. இதே நாளில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ள ‛ஆல்பா' என்ற படமும் வெளியாக உள்ளது. இதனால் தற்போது அங்குள்ள ஊடகங்கள், வருகிற கிறிஸ்துமஸ்ஸிற்கு ஆலியா பட்டும், ஸ்ரீ லீலாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதாக பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அவர்கள் இருவரையும் எதிரும் புதிருமான போட்டி நடிகைகளாக சித்தரித்து வருகிறார்கள்.