பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, முனிஸ்காந்த், புகழ் வரிசையில் இப்போது காமெடியன் மொட்டை ராஜேந்திரனும் ஹீரோவாகிவிட்டார். அவர் கதைநாயகனாக நடித்த 'ராபின்ஹுட்' பட டிரைலரை பாராட்டியுள்ளார் இயக்குனர் எச்.வினோத். 1980 பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் டிரைலரை பார்த்த இயக்குனர் எச்.வினோத் ''படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
1980களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்னைகளும் தான் இந்த படத்தின் மையம். நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து, கலகலப்பான திரைக்கதையுடன் உருவாக்கி உள்ளேன்.
அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர். பொதுவாக, தான் நடிக்கும் பட விழாக்கள், புரமோஷன்களுக்கு மொட்டை ராஜேந்திரன் வருவது இல்லை. தான் கதைநாயனாக நடிக்கும் இந்த பட விழாவுக்காவது வருவாரா? அல்லது அஜித் பாலிசியை பின்பற்றுவாரா என தெரியவில்லை.