பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' படத்தலைப்பு அறிவிப்பு விழா, ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. 100 அடி பிரமாண்ட டிஜிட்டல் ஸ்கிரீனில் படத்தலைப்பை வீடியோவாக வெளியிட்டார் ராஜமவுலி. சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, முதல் 2 முறை அந்த வீடியோ பாதியில் நிறுத்தப்பட்டது. 3வது முறைதான் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
அப்போது பேசிய ராஜமவுலி, 'எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பாவுக்கு அதிகம் உண்டு. அவர் ஆஞ்சநேயரை வணங்குவார். என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்கள் இந்த பிரச்னையை சரி செய்யலாமே' என்று பேசினார். இது சர்ச்சை ஆகி உள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை வாரணாசி படமாக எடுக்கும் ராஜமவுலி மேடையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசலாமா? அவரின் முந்தைய படங்களில் கடவுள் நம்பிக்கை காட்சிகள், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அப்படியானால் அவர் சினிமாவுக்காக, பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்தாரா? கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரால் இப்படிப்பட்ட காட்சிகளை ரசித்து உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு விரைவில் ராஜமவுலி பதில் சொல்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேமேடையில் ஹீரோ மகேஷ்பாபுவை ராமர் வேடத்தில் பார்த்தபோது மெய் சிலர்த்தது என்றும் ராஜமவுலி பேசியிருந்தார்.