Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை

17 மார், 2026 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Oscar-memorial-sparks-controversy
Advertisement

ஆஸ்கர் விருது விழாவில் உலக அளவில் மறைந்த சினிமா கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். நேற்று நடந்த 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அந்த நினைவஞ்சலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நடிகரான தர்மேந்திரா மற்றும் சில ஹாலிவுட் சினிமா கலைஞர்கள் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்ட 15 நிமிட நினைவஞ்சலி வீடியோவில் புறக்கணிக்கப்பட்டனர். இது குறித்து தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினி, “நிச்சயமாக, இது வருத்தத்திற்குரிய விஷயம். உலகின் பல பாகங்களிலுள்ள எண்ணற்ற மக்களுக்குப் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடிகரை அவர்கள் புறக்கணித்தது மிகவும் வருந்தத்தக்கது. தரம்ஜி எங்கும் அறியப்பட்டவராகவும், எங்கும் அங்கீகரிக்கப்பட்டவராகவும் திகழ்ந்தார்,” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆஸ்கர் தரப்பில் ஒளிபரப்பு பொறுப்பு அதிகாரி ராப் மில்ஸ், “முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் 15 நிமிடங்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஆம், எப்போதும் யாரேனும் ஒருவர் விடுபட்டுப் போவது இயல்புதான். துரதிர்ஷ்டவசமாக நாம் ஆண்டுதோறும் அதிகமானோரை, குறிப்பாக பல ஜாம்பவான்களை இழந்து வருகிறோம். இத்தகைய சூழலில் அனைவரையும் உள்ளடக்கிச் செயல்படுவது அனேகமாக மிகக் கடினமான ஒரு விஷயமாக இருக்கும். நேற்றிரவு நடந்த ஆஸ்கர் விழாவில், ஆஸ்கர் வரலாற்றிலேயே இதுதான் மிகச் சிறந்த ஒன்றாக அமைந்திருக்கக் கூடும் என்று நான் உறுதியாகக் கருதுகிறோன்,” என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் ஆஸ்கர் இணையதளத்தின் நினைவஞ்சலி பக்கத்தில் விடுபட்ட நபர்களைச் சேர்த்துள்ளார்கள். அதில் நடிகை சரோஜா தேவி, நடிகர்கள் தர்மேந்திரா, மனோஜ்குமார், கோட்டா சீனிவாச ராவ், டாகுமெண்டரி தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடுசூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ... சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு சினிமா அற்புதமான தொழில்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap