மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஜி.வி.பிரகாஷ், கவுரி ப்ரியா நடிக்க, மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கும் 'ஹேப்பி ராஜ்' படவிழாவில் விஜய்சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அப்போது பேசிய தமிழ் குமரன், 'விஜய் சேதுபதியை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுமாறு கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்' என்று பேசினார். அடுத்து பேசிய விஜய் சேதுபதி, ''தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து போனால் நம்ம படத்தை ஏதாவது செய்திடுவாங்களோனு பயம். அதனாலதான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கவில்லை. ஒரு பொறுப்பை பொறுப்பாக செய்யணும். அதுக்கு பிரச்னை வரும். அதனால் சங்க தேர்தலில் நிற்கவில்லை. அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
இது அட்வைஸ் அல்ல, அனுபவம்.. சினிமா அற்புதமான தொழில். அதுக்கு வர பயப்படாதீங்க. ஸ்கிரிப்டை தயாரிப்பாளர் படிக்கணும். இந்த பட ஹீரோ ஜி வி பிரகாஷ் எல்லா ரோலுக்கும் பொருந்துகிறார். அவர் ஸ்கூல் பையனாக கூட நடிக்கலாம். ஹீரோயினுக்கும், இயக்குனருக்கும் வாழ்த்துகள். ஹீரோ ஜி வி பிரகாஷ் பெரிய இசையமைப்பாளர். ஆனால் இந்த படத்தில் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.. அவர் மீது எனக்கு அன்பு மரியாதை உண்டு. 'பண்ணையாரும் பத்மினி' பட காலத்தில் இருந்தே அவர் நண்பர். எந்த நேரத்திலும் போன் செய்து பேசலாம். அவர் திறமைக்கு இன்னும் உயரம் போகணும்'' என்றார்.