தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! |

மலையாள சினிமாவின் கே.பாக்யராஜ் என்று அழைக்கப்படுகிறவர் பாலச்சந்திர மேனன். 1980-90 காலகட்டங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். 1998ம் ஆண்டு 'சமந்தரங்கள்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
அவர் இயக்கிய ஒரே தமிழ் படம் 'தாய்க்கு ஒரு தலாட்டு'. இதில் சிவாஜி, பத்மினி, விசு, பாண்டியராஜன், ராஜலட்சுமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடித்தனர். இது பாலச்சந்தி மேனன் மலையாளத்தில் இயக்கிய 'ஒரு பைங்கிளிகதா' என்ற படத்தின் ரீமேக்.
கே.ஆர்.கங்காதரன் தயாரித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார், ஜெயனன் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். மலையாளத்தில் பெற்ற வரவேற்பை இந்த படம் தமிழில் பெறவில்லை. அதன் பிறகு பாலச்சந்திர மேனன் தமிழில் படம் இயக்கவும் இல்லை.