காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆரம்ப காலகட்டங்களில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். அதில் முக்கியமான படம் 'பெண்ணின் பெருமை'. காரணம், இந்த படத்தில் அவர் ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். 1955ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பி.புல்லையா இயக்கினார். இது தெலுங்கு திரைப்படமான 'அர்த்தங்கி'யின் ரீமேக் ஆகும்.
இது மணிலால் பானர்ஜி எழுதிய புகழ்பெற்ற வங்காள நாவலான 'சுயம்சித்தா'வை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
பத்மா (சாவித்ரி) என்ற கிராமப்புறப் பெண்மணியின் கதை, அவள் மனநலம் பாதிக்கப்பட்ட ரகுவிற்கு (ஜெமினிகணேசன்) கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறார். விருப்பமே இல்லாமல் ஜெமினி திருமணம் செய்து கொண்ட சாவித்திரி அவரை எப்படி மாற்றி நல்ல மனிதராக உருவாக்குகிறார் என்பது தான் படத்தின் கதை.
சாவித்திரிக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் மாமியார் கேரக்டரில், சாந்தகுமாரி நடித்திருந்தார், பாலியல் ரீதியாக சீண்டும் வில்லனாக ஜெமினி கணேசனின் தம்பியாக சிவாஜி நடித்திருந்தார்.




