நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

நடிகை ஆண்ட்ரியா தயாரித்து நெகட்டிவ் ரோலில் நடிக்கும் படம் 'மாஸ்க்'. கவின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக ருஹானி சர்மா நடித்துள்ளார். படம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது.
ருஹானி சர்மா தமிழுக்கு புதியவர் அல்ல. இமாச்சலத்தை சேர்ந்த மாடல் அழகியான இவர் 2017ம் ஆண்டு வெளிவந்த 'கடைசி பெஞ்ச் கார்த்திக்' என்ற படத்தின் மூலம்தான் சினிமா நடிகை ஆனார்.
அதன்பிறகு இங்கு வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாள படங்களுக்கு சென்று ஒரு ரவுண்ட் அடித்து விட்டு தற்போது 'மாஸ்க்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 'மாஸ்க்' ருஹானிக்கு மாற்றம் தருமா என்பது 21ம் தேதி தெரிய வரும்.