நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஹாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா சர்மா கடந்த 2017ல் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக 2018ல் ‛ஜீரோ' என்கிற படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா சர்மா. அதன்பிறகு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி ஒரு சில படங்களையும் டிவி தொடரையும் தயாரித்தார். அதன் பிறகு தனது கணவருடன் இணைந்து சில விளம்பர படங்களில் கூட நடித்தார். மீண்டும் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் விதமாக 2022ல் இவர் ‛சக்தா எக்ஸ்பிரஸ்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படத்தின் பட்ஜெட் அதிகமானது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படம் எடுக்கப்பட்டும் திரைக்கு வராமல் முடங்கி கிடந்தது. இந்த நிலையில் இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் விதமாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.