சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரது இரண்டு கைகளிலுமே விலை உயர்ந்த கடிகாரங்களை அணிந்திருந்தார். இது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், “நான் ஐரோப்பாவில் படிப்புக்காக சென்று தங்கி இருந்தபோது என் அம்மா என்னை அங்கே பார்க்க வரும்போதெல்லாம் தனது கைகளில் இரண்டு கடிகாரங்களை கட்டிக் கொள்வார். ஒன்று ஐரோப்பிய நேரத்திற்காகவும் இந்திய நேரத்திற்காகவும்.
இதை பார்த்து என் தந்தை கூட சில நேரங்களில் இப்படி இரண்டு கடிகாரங்களை கட்ட ஆரம்பித்தார். நானும் கூட அங்கே இருந்தபடி இங்கே அப்பா அம்மாவுடன் பேசும்போது அவர்கள் நேரம் விசாரிப்பார்கள் என்பதற்காக இரண்டு கடிகாரங்களை அணிய துவங்கினேன். அப்போது இருந்து இந்த பழக்கம் எனக்கு ஒட்டிக்கொண்டது. சில நேரங்களில் வேடிக்கைக்காக மூன்று கடிகாரங்களை கூட அணிவதும் உண்டு” என்று கூறியுள்ளார்.