சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஜெயிலர் படத்தை அடுத்து மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவையும் ஒரு ஆந்திரா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் நெல்சன். சமீபத்தில் பாலகிருஷ்ணாவை சந்தித்து அவர் நடிக்க வேண்டிய ரோல் மற்றும் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அதில் திருப்தி இல்லாமல் அவர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனக்கான ரோலில் மிகக்குறைவான காட்சி இருப்பதோடு, அதற்கான சம்பளமும் குறைவாக இருப்பதாகச் சொல்லி அவர் நடிக்க மறுத்து விட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.