இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என நினைக்கவில்லை : கென் கருணாஸ் | கத்தனார் பட டிரைலர் வெளியானது | சூரி படத்தில் நடிக்க மமிதாவிடம் பேச்சுவார்த்தை...? | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு யுஏ சான்றிதழ் | கயாடு லோஹர் கைவசம் 7 படங்கள் | மீண்டும் கதை நாயகன் ஆன ஆனந்த் பாபு | இலங்கைத் தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'பொம்மை' | தனது பாடல்கள் காப்புரிமை விவகாரம் : டி ராஜேந்தர் வழக்கு | பிளாஷ்பேக் : தனியாக வெளியான முதல் சினிமா பாடல் | லெஜண்ட்ரி நடிகர்களை உருவாக்கிய இடத்தில் நான் : பாயல் ராஜ்புட் பெருமிதம் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛அமரன்'. வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் வந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கமல் நிறுவனம் தயாரித்தது. சுமார் 300 கோடி வசூலித்து சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் பிளாக்பஸ்டர் உச்ச வசூல் படமாக மாறியது.
இந்நிலையில் இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது. கோவாவில் இம்மாதம் நடக்கும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 81 நாடுகளை சேர்ந்த 230-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன.




