ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? | ஆர்யா 40வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில் |

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வருகிற பொங்கலை முன்னிட்டு ஜன., 9ல் படம் வெளியாகிறது.
விஜய் அரசியலுக்கு செல்வதால் அவரின் கடைசிப்படம் என இதை அறிவித்துள்ளார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‛தளபதி கச்சேரி' என்ற முதல்பாடலை வெளியிட்டுள்ளனர். அறிவு எழுதி உள்ள இந்த பாடலை விஜய் உடன் அனிருத் மற்றும் அறிவு ஆகியோரும் இணைந்து பாடி உள்ளனர். ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் இந்த பாடலில் நடனமாடி உள்ளார்.