டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரபல முன்னாள் மலையாள நடிகையும் நடிகர் பிஜு மேனனின் மனைவியுமான சம்யுக்தா வர்மா தன் பெயரில் பல போலியான கணக்குகள் உலா வருவதாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் சரத்குமார், நெப்போலியன் நடித்த ‛தென்காசி பட்டணம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மொத்தமே 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் பிஜு மேனனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது பேஸ்புக்கில் இவரது பெயரில் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் விதமாக போலியாக கணக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பல போலியான கணக்குகள் இருக்கின்றன.
ஆனால் தனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற்ற ஒரே ஒரு அதிகாரப்பூர்வமான கணக்கு மட்டுமே இருப்பதாகவும் மற்ற அனைத்துமே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் யாரும் அதில் பகிரப்படும் தகவல்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி போலி கணக்கை செயல்படுத்தி வருபவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.