கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' |

சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் '' நான் கம்யூட்டர் இன்ஜினியர்தான். ஆனால், கீ போர்டில் ஏபிசிடி எழுத்துகளை தேடுவேன். என் போனில் பலமுறை பாஸ்வேர்டு மறந்து இருக்கிறேன். அதனால், போன் லாக் ஆகியிருக்கிறது. பேஸ் ஐடி வந்தபின் அந்த பிரச்னையை தீர்ந்தது.
அனைத்து சமூக வலைதளங்களிலும் நான் இருக்கிறேன். ஆனால் அதை அதிகம் பயன்படுத்தவது இல்லை. அவ்வப்போது இன்ஸ்டா போய் பார்ப்பேன். அதிலும் தவறுதலாக எதையாவது ரீ போஸ்ட் செய்துவிடுகிறேன். ஆகவே அதையும் தவிர்த்து வருகிறேன். என் சமூக வலைதள கணக்குகளை இன்னொருவர்தான் பார்த்துக்கொள்கிறார் என்று பேசியிருந்தார்.
கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் இருந்தாலும், அவர்கள் ஆக்டிவ் ஆக இருப்பதுபோல காண்பித்துக் கொண்டாலும் இப்போது சோஷியல் மீடியா மானேஜர், சோஷியல் மீடியா டீம் என்ற தனிப்பட்டவர்கள்தான் அவர்கள் அக்கவுண்ட்டை கவனித்து வருகிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு நேரம் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களை பற்றி அதிகமான தவறான செய்திகள், கிண்டல், கேலி, தனிப்பட்ட தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வருவதால், தங்கள் மனநிலையை சமமாக வைத்து இருக்க, படப்பிடிப்பு, பட வேலைகளில் பிஸியாக இருக்கும்போது டென்ஷன் ஆகாமல் இருக்க, இதை செய்கிறார்களாம்.
அந்த நடிகர், நடிகைகள் பற்றி முக்கியமான செய்திகள் வந்தால், முக்கியமான சினிமா செய்திகள் என்றால், ஏதாவது வில்லங்கம் பெரிதானால் இந்த டீம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறது. அவர்கள் படம் , பாடல் ரிலீஸ் ஆகும்போது மட்டும் விளம்பரத்துக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த சமயத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார்கள். ஓய்வு நேரம் கிடைக்கும்போது செல்போனில் அந்த நடிகர், நடிகைகள் தங்களுக்கு விருப்பமான தளத்துக்கு சென்று பார்க்கிறார்கள். இப்போது பல படப்பிடிப்புதளங்களில் செல்போனுக்கு அனுமதி இல்லை. நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் செல்போன் முழ்கினால் வேலை கெடுகிறது என்பதால் அதை தவிர்க்க சொல்கிறார்கள்.
கேரவனில் இருக்கும்போது மட்டும் அவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். படப்பிடிப்பில் அவர்கள் உதவியாளர்கள் கையில் மட்டுமே செல்போன் இருக்கிறது. இப்போது பேட்டி கொடுக்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் தாங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் நேரம் செலவழிப்பது இல்லை. அதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கிறது. தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்'' என்கிறார்கள்.




