சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மங்களூரை சேர்ந்த கிர்த்தி ஷெட்டி, தெலுங்கில் ஓரளவு பிரபலம். தமிழில் அவர் நடித்த ‛தி வாரியர், கஸ்டடி' படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. ‛தி வாரியர்' படத்தை லிங்குசாமி இயக்க ராம் நடித்தார். ‛கஸ்டடி' படத்தை வெங்கட்பிரபு இயக்க நாகசைதன்யா நடித்தார். இரண்டு படங்களும் இங்கே ஓடவில்லை. தமிழில் பெரிய ஹீரோயினாக ஆக வேண்டும் என்ற அவரின் கனவு தகர்ந்தது. இப்போது கார்த்தி ஜோடியாக வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக எல்ஐகே, ரவிமோகன் ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் இரண்டு படங்கள் இந்த மாதம் ரிலீஸ். இந்த படங்கள் வெற்றி பெற்றால் தமிழில் கால் பதிக்கலாம் என்று அவர் நம்புகிறாராம். முன்பை விட ஓரளவு தமிழ் பேசவும் கற்றுக் கொண்டவர், கவர்ச்சியாக நடிக்க மட்டும் கொஞ்சம் யோசிக்கிறாராம். ஏற்கனவே, தெலுங்கு திரையுலகை சேர்ந்த பாக்யஸ்ரீ, ஸ்ரீலீலாவும் 2026ல் தமிழில் கொடி கட்டி பறக்க வேண்டும், அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று பிளானுடன் இருப்பது தனிக்கதை.




