அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

1987ம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படம் 'பிரிடேட்டர்'. இதில் அர்னால்டு ஸ்வாஸ்நேகர், கார்ல் வெயிட் உள்பட பலர் நடித்திருந்தனர். ஜான் மெக்டீர்னர் இயக்கி இருந்தார்.
அமெரிக்காவில் கொரில்லா போராளிகளிடம் உள்ள பிணயக் கைதிகளை மீட்க செல்லும் அதிரடிப்படை வீரர்கள், வேற்றுக்கிரகவாசிகளால் தாக்கப்படுகிறார்கள். அவர்களை அழிக்க கதாநாயகன் என்ன மாதிரியான சாகங்களை மேற்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இதையடுத்து இதன் அடுத்த பாகம் 1990ம் ஆண்டு வெளியானது. இதை ஸ்டீவன் ஹாப்கின்ஸ் இயக்கினார். இதை தொடர்ந்து பல பெயர்களில் பல பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த வரிசையில் அடுத்து வந்துள்ள படம் 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்'. டான் டிராக்டன்பெர்க் இயக்கியுள்ள இப்படத்தில் எல்லே பான்னிங் நாயகனாக நடித்துள்ளார். முந்தைய படங்களில் வலிமை மிக்கதாக இருக்கும் பிரிட்டர்கள் மனிதர்களை அழிப்பதாக சித்தரிக்கப்பட்டது. இந்த பாகத்தில் தாங்கள் வாழ்வதற்காவே பெரிய போராட்டத்தை சந்திப்பது போன்ற சித்தரிக்கப்பட்டது. அதாவது கொடிய உயிரினமான பிரியேட்டர், பசிக்கும், அன்புக்கும் ஏங்கும் சென்டிமெண்ட் கதாபாத்திரங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் கடந்த வாரம் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவில் வருகிற 7ம் தேதி வெளியாகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.