‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர் | மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா | ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா | 47வது படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா | அரசன் பட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி | தாத்தாவாக நடிக்க மாட்டேன், அப்பாவுடன் நடிக்க ஆசை : விக்ரம் பிரபு | ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய ஜீ தமிழ் | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஐந்து அணிகள் மோதல் | கிரிக்கெட் வெப் தொடரில் அறிமுகமாகும் விக்ராந்த் |

ஹிந்தியில் ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‛துரந்தர்'. இப்படத்தில் அவருடன் அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ‛தெய்வத்திருமகள்' புகழ் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஸ்பை கலந்த ஆக் ஷன் படமாக வெளியானது. இப்படம் திரைக்கு வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டி உள்ளது. 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி இப்படம் வசூலித்துள்ளது.