பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

2015ல் வெளிவந்த 'பாகுபலி 1', 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' இரண்டையும் சேர்த்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் நாளை அக்டோபர் 31ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.
இப்படத்திற்கு புதிய படங்களைப் போல முன்பதிவில் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். வெளிநாடுகளில் இப்படத்திற்கான பிரிமியர் காட்சிகள் நேற்றே நடைபெற்றது, இன்றும் தொடர்கிறது. இதற்போதைய நிலவரப்படி சுமார் 10 கோடிக்கு இப்படத்திற்கான முன்பதிவு நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
வெளிநாடுகளில் மட்டும் இப்படம் அமெரிக்காவில் 401 தியேட்டர்கள், இங்கிலாந்து, அயர்லாந்து 210, அரபு நாடுகள் 152, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 144, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 103, ரஷ்யா 58, பிரான்ஸ் 40, ஆப்ரிக்கா 30, கனடா 20, இதர நாடுகளில் 9 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.