விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ் நடிகரான கார்த்திக் பிற மொழிகளில் நடித்தது மிகவும் குறைவு. அப்படி அவர் நடித்த பிற மொழி படங்களில் முக்கியமானது தெலுங்கில் வெளிவந்த 'அன்வேஷ்னா'. இந்த படத்தை வம்சி இயக்கினார். கார்த்திக்குடன் பானுப்பிரியா, கைகல சத்யநாராயணா, சரத்பாபு, ரலாபல்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். வம்சி இயக்கி இருந்தார்.
மனிதர்களை வேட்டையாடும் ஒரு புலியை தேடிச் செல்லும் காட்டிலாகா அதிகாரியின் கதை. முழு படமும் அடர்ந்த காட்டிற்குள் எடுக்கப்பட்டது. இன்றளவும் தெலுங்கு சினிமாவின் முக்கியமான த்ரில்லர் படமாக போற்றப்படுகிறது. 11 தியேட்டர்களில் 100 நாளையும், 6 தியேட்டர்களில் வெள்ளி விழாவும் கண்ட படம். இதில் கார்த்தி முரளி (இயற்பெயர்) என்ற பெயரில் நடித்தார்.
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றதால் 'பாடும் பறவைகள்' என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. தெலுங்கு அளவிற்கு வெற்ற பெறாவிட்டாலும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. பிற மொழியில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட கார்த்திக்கின் ஒரே படம் இது.