தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்ட சேலம் துரை சாமி ஐயா சுந்தரம், சுதந்திர போராட்ட வீரராகவும் நாடக நடிகராகவும் இருந்தார். தனது 12 வயது முதல் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக சபாவில் நடிக்க ஆரம்பித்தார். 1942 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது 'கவியின் கனவு' என்ற நாடகத்தை எழுதினார்.
பின்னர் சக்தி நாடக சபாவை தொடங்கி 'கவியின் கனவு' நாடகத்தை அரங்கேற்றினார். சுதந்திர இந்தியா பற்றிய இந்த நாடகம் 1500 முறை மேடைகளில் நடத்தப்பட்டது. நாடகத்தில் சிவாஜி கணேசன். எம் என் நம்பியார் எஸ்வி சுப்பையா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர்.
நாகப்பட்டினத்தில் அந்த நாடகம் நடைபெற்ற போது 'கவியின் கனவு ஸ்பெஷல் சிறப்பு ரயில்' திருச்சியில் இருந்து இயக்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்த நாடகம் பேசப்பட்டது. இதனை திரைப்படமாக்க எஸ்.டி.சுந்தரம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.