'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். படப்பிடிப்புக்கு ஒன்றுக்கு சென்றபோது அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காரில் இருந்து இறங்கி ஒரு இளைஞரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றார்.
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அமிதாப்பச்சன். அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவு அமிதாப் பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவை சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட் என்ற அமைப்பு மும்பை போலீசுக்கு அனுப்பி வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, மும்பை போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளனர். இதனால் அமிதாப் பச்சனுக்கும், அந்த இளைஞனுக்கும் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கான அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
அனுஷ்காவுக்கும் சிக்கல்
அமிதாப் போன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தனது காரைத் விட்டு இறங்கி பைக்கில் பயணம் செய்தார். இவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதுபற்றியும் மும்பை போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் இவர் மீதும் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.