25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை |

பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன், 80. தற்போதும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பொதுவாக படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் செல்லக்கூடியவர் அமிதாப். அப்படிதான் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக கடும் போக்குவரத்து நெரிசலில் அவர் மாட்டிக் கொண்டார்.
இதனால் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக காரை விட்டு இறங்கிய அமிதாப், சாலையில் சென்ற ஒருவரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றார்.
இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்துள்ள அமிதாப், ‛‛நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு உரிய நேரத்தில் டிராபிக் சிக்கல்களை தவிர்த்து கொண்டு வந்து சேர்த்தீர்கள். ரைடுக்கு நன்றி நண்பா. தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.