பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். படப்பிடிப்புக்கு ஒன்றுக்கு சென்றபோது அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காரில் இருந்து இறங்கி ஒரு இளைஞரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றார்.
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அமிதாப்பச்சன். அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவு அமிதாப் பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவை சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட் என்ற அமைப்பு மும்பை போலீசுக்கு அனுப்பி வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, மும்பை போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளனர். இதனால் அமிதாப் பச்சனுக்கும், அந்த இளைஞனுக்கும் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கான அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
அனுஷ்காவுக்கும் சிக்கல்
அமிதாப் போன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தனது காரைத் விட்டு இறங்கி பைக்கில் பயணம் செய்தார். இவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதுபற்றியும் மும்பை போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் இவர் மீதும் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.