மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் முதல் முறையாக இயக்கி வரும் படம் 'இதயம் முரளி'. இதில் அதர்வா, நட்டி நட்ராஜ், தமன், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர் உள்ளிட்டோர் இணைந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஒரு சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்கின்றார். இதற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதுவரை இந்த படத்திற்காக எடுத்த காட்சியை படத்தொகுப்பு செய்தாலே 4 மணி நேர நீளம் கொண்ட படமாக வந்துள்ளது. இதனால் தற்போது இந்த படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிடலாமா என்கிற எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதயம் முரளி படத்தை முதலில் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது. மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.