ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ஜீவா சங்கர் தமிழ் சினிமாவில் ‛நான், அமரக்காவியம், எமன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பின் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இதில் அதர்வா, வாணி போஜன், ரூபா மஞ்ஜரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு வலை என பெயரிட்டு, டீசரையும் வெளியிட்டுள்ளனர். இதனை ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் வெளியிட்டனர்.
குட்டி, சாரா என இரு வேடங்களில் அதர்வா நடித்துள்ளார். கடல், மீனவர்கள் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இப்படம் உருவாகி இருப்பது டீசரை பார்க்கையில் புரிகிறது. ஜிப்ராஜ் இசையமைக்கிறார். டீசரை பார்க்கையில் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்து இருக்கும் என தெரிகிறது. விரைவில் ரிலீஸ் என டீசரில் குறிப்பிட்டுள்ளனர்.




