Advertisement

சிறப்புச்செய்திகள்

கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி

07 ஜன, 2026 - 01:28 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-is-my-brother-on-screen-and-in-real-life-Atharva-Lainchi
Advertisement

வருகிற 10ம் தேதி பரபரப்புடன் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்துள்ளார் அதர்வா. தம்பி என்றாலும் அவருக்கு எதிரான கேரக்டரில் நடித்துள்ளார். சமீபகாலமாக தோல்வியை சந்தித்து வரும் அதர்வாவிற்கு இந்தப் படம் ஒரு திருப்பம் தரும் என்று நம்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரனை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 'பராசக்தி' கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ் தான். 'பராசக்தி' படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி.

ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும் இந்தப்படம் வெளியான பிறகு இந்திய சினிமாத்துறையில் நிச்சயம் பேசுபொருளாகும். ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் . ரவியின் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தேன்.

இயக்குனர் சுதாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா தன்னை 'மேடம்' என அழைக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது.

வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர். சினிமாவில் அவரது வளர்ச்சியை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக 'பராசக்தி' உருவாகியுள்ளது" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் இங்கு மட்டுமல்ல சவுதியிலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap