Advertisement

சிறப்புச்செய்திகள்

காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல்

06 பிப், 2026 - 04:19 IST
எழுத்தின் அளவு:
Distributor-who-told-30-lakhs-for-2-crore-collection-RK-Selvamani-shocking-information
Advertisement

திரையுலகத்தைப் பொறுத்தவரை புதிய படங்களின் வசூலில் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தவறான கணக்குக் காட்டுவார்கள் என்று சொல்வார்கள். நன்றாக வசூல் ஆனாலும், வசூலிலில்லை என்று சொல்வது வழக்கம் என பல காலமாக பேச்சு இருக்கிறது. அது இப்போதும் கூட தொடர்வதாக கோலிவுட்டில் பலரும் சொல்லக் கேட்கலாம்.

1992ம் ஆண்டில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரஷாந்த், ரோஜா, பானுமதி, மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'செம்பருத்தி'. அந்தப் படத்தின் வசூலில் ஒரு வினியோகஸ்தர் என்ன பொய் சொன்னார் என்பதை நேற்று நடைபெற்ற 'உயிருள்ளவரை உஷா' படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்வில் ஆர்கே செல்வமணி கூறினார்.

“நான் இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக மாறி 'செம்பருத்தி' படத்தைத் தயாரிக்கிறேன். இந்த திரையுலகம் எப்படி என்றால், ஒருவர் மாட்டினால் அவரைக் காலி செய்துவிடும். நான் அந்தப் படத்தை சிட்டி, என்எஸ்சி, டிடி ஆகிய ஏரியாக்களுக்கு ஐடி பாலகிருஷ்ணன் என்பவரிடம் 40 லட்ச ரூபாய்க்கு எம்ஜி போட்டு டிஸ்டிரிபியூஷன் கொடுத்தேன்.

40 லட்சத்தில் பப்ளிசிட்டி 4 லட்சம் போக திரும்ப 36 லட்சம் தொகை எனக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் வசூல் செய்யவில்லை, 6 லட்சம் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அடுத்த படம் செய்வதற்கு எனக்கு 'ரெட்' என்ற செக் வைத்திருந்தார்கள். அது குறித்த பஞ்சாயத்து வினியோகஸ்தர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு வேறு வேலைக்காக வந்திருந்த டி ராஜேந்தர் எனக்காகப் பேசினார்.

என்ன பிரச்னை என்று கேட்டவரிடம், பிரச்னையைச் சொன்னேன். உடனே டி ராஜேந்தர், “ஒரு கலைஞனை ஏமாற்றாதீர்கள், உருப்பட மாட்டீர்கள் என்றார். மேலும், 'எங்க வீட்டு வேலன்' படமும் 'செம்பருத்தி' படமும் ஒரே நாளில் வெளியானது. ஒரு தியேட்டர்ல என்னோட 'எங்க வீட்டு வேலன்' படம் இரண்டு லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை வசூல் செய்தது. 'செம்பருத்தி' சில இடங்களில் இதை விட அதிகமாவும், சில இடங்களில் குறைவாகவும் வசூல் செய்திருக்கும்.

'எங்க வீட்டு வேலன்' படம் சிட்டி, செங்கல்பட்டு, டிடி ஏரியாக்களில் இரண்டே கால் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 'செம்பருத்தி' படம் இரண்டு கோடி அல்லது இரண்டரை கோடி வசூல் செய்திருக்கும். இவரை ஏமாற்றினால், வாழ்க்கையில் உருப்பட மாட்டீர்கள், என்று சொன்னார்.

அப்போது வினியோக சங்கத் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசனிடம் இந்த பிரச்சனையிலிருந்து விடுவியுங்கள் என்று கேட்டேன். கடைசியில் படம் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று முடித்து வைத்தார்கள்.

ஆனால், அதன் பின் இரண்டு வருடங்களில் அந்த வினியோகஸ்தர் இறந்துவிட்டார். அந்த பாலகிருஷ்ணன் என்எஸ்சி ஏரியாவின் மிகப் பெரிய டிஸ்ட்ரிபியூட்டர். எனது 'புலன் விசாரணை' படத்தை வினியோகித்தவர் அவர்தான். என் மீது தவறு இல்லை நியாயம் இருக்கிறது என்று தெரிந்ததும் எனக்காகக் குரல் கொடுத்தவர் டி ராஜேந்தர்,” என்று பேசினார்.

2 கோடி வசூலுக்கு 30 லட்சம் மட்டுமே கணக்கு சொன்னது அந்தக் காலத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அதையும் பஞ்சாயத்து பேசி முடித்து வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிகரமான உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம்‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன ... அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap