ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ஏஆர்கே புரொடக்சன் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் பெருமாள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "ஊருக்கு ரெண்டு ஊதாரி " என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிக் பாஸ் மூலம் பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குனர் யோகேஸ்வரன் கூறியதாவது : இது முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக உருவாக இருக்கிறோம். பொதுவாகவே ஊருக்கு ரெண்டு ஊதாரி இருப்பார்கள், ஆனால் ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸ்யமான முழு நீள காமெடி படமாக எடுக்கவிருக்கிறோம். சினிமா ரசிகன் இரண்டு மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்று தான் எதிர் பார்க்கிறாரன். அப்படி சினிமா ரசிகனை முழு என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும்" என்றார்.
இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.




