ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை குஷ்பு. இயக்குனர் சுந்தர் சியை காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திமுக.,வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கிய குஷ்பு பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். கடந்தமுறை நடந்த சட்டசபை தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அவருக்காக கணவர் சுந்தர் சியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து பா.ஜ.,வில் பயணித்து வருகிறார் குஷ்பு.
இந்நிலையில் மனைவி குஷ்புவை போன்று அவரது கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறங்கி உள்ளார். தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணியில் அங்கும் வகிக்கும் புதிய நீதிக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை, மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பாக அதிமுக., சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதன்முறையாக அரசியலில் களம் காண உள்ளார் சுந்தர் சி. கடந்தமுறை மனைவிக்காக பிரச்சாரம் செய்தார் சுந்தர் சி. இந்தமுறை அவரே களம் காண்பதால் அவருக்காக மனைவி குஷ்புவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காரணம் அதிமுக., கூட்டணியில் தான் பா.ஜ.,வும் அங்கம் வகிக்கிறது. ஆக கணவர் என்பதையும் தாண்டி தான் கூட்டணி வகிக்கும் கட்சிக்காகவும் நிச்சயம் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்.