மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிப்பில் உருவான படம் மாநாடு. யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்த படம் வெற்றிபெற்றதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியினால் கொடுக்க முடியவில்லை. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து அதற்கு டி.ராஜேந்தர் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, ஒருவேளை ரூ.5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையினையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்தே மாநாடு திரைக்கு வந்தது.
ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீதும் டி.ராஜேந்தர் வழக்குத்தொடர்ந்ததை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், ‛வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா,' எனக் கூறியுள்ளார். அதோடு இது சம்பந்தப்பட்ட விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.