என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று (டிச.,12) 71வது பிறந்த நாள். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வாழ்த்து:
ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தனது திறமையான நடிப்பு, படைப்பாற்றல் மூலம் மக்களை தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தட்டும். அவருக்க நீண்ட வாழ்நாளையும், நல்ல உடல்நிலையையும் கடவுள் அளிக்கட்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்:
உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். 72வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்;நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.
கமல்ஹாசன்:
இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.