பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வருகிறது 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
இந்நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா குணமான கமல் தனிமைப்படுத்தலில் இருப்பதால் இதில் கலந்துகொள்ளவில்லை. ஜனவரி 31 வரை இடைவிடாத படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பில் டிசம்பர் 20 முதல் கமல் இணைகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 14 -17 வரை பொங்கலுக்காக மட்டுமே ஷூட்டிங் பிரேக் விடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.