சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் |

கடந்த 2001ம் ஆண்டு அஜித் நடிப்பில் 'தீனா' என்ற படத்தை இயக்கி அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், அதையடுத்து 'ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2020ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் அவர் இயக்கிய 'தர்பார்' மற்றும் இந்த ஆண்டு மார்ச்சில் சல்மான்கான் நடிப்பில் அவர் இயக்கி வெளியான 'சிக்கந்தர்' என்ற இரண்டு படங்களும் தோல்வி அடைந்து விட்டன.
என்றாலும் அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கி கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியான 'மதராஸி' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், அடுத்தபடியாக சிம்புவுக்கு ஒரு கதை தயார் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் சிம்பு நடிக்கும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு அவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு வரும் ஏ ஆர் முருகதாஸ், தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிம்பு நாடு திரும்பியதும் அவரை சந்தித்து கதை சொல்லப் போகிறாராம்.