நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் |

பார்க்கிங் படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான கே.எஸ். சினிஷ் தயாரிக்கும் ‛நிஞ்சா', ‛சூப்பர் ஹீரோ', படங்களின் தொடங்க விழா சென்னையில் நடந்தது. சூப்பர் ஹீரோ படத்தில் அர்ஜூன் தாஸ், தேஜூ அஸ்வினி நடிக்கிறார்கள், நிஞ்சா படத்தில் பைனலி பாரத் நடிக்கிறார். இந்த பட பூஜையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், மெர்ச்சி சிவா, கவின், இயக்குனர்கள் வெங்கட்பிரபு, நெல்சன், ஆதிக் ரவிச்சந்திரன், நித்திலன், பார்க்கிங் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் ஜாலியாக பேசியது ''நான் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, ஆரம்பத்தில் மெரினா பீச்சில் அமர்ந்துதான் கதை, வசனம் எழுதவோம். அது, வேட்டை மன்னன் கதை. அப்போது தயாரிப்பாளர், ஹீரோ பிக்ஸ் ஆகலை. அடுத்து ஒரு ஆபீஸ் போட்டோம், அங்கு வந்தார் சினிஷ். அவரும் நெல்சனும், கல்லுாரி நண்பர்கள் என்பதால் உரிமையாக பேசுவார்.
நீங்க என்ன ஆகணும்னு ஆசைப்படுறீங்கனு என்னிடம் அவர் கேட்டார். அப்போது அவரை வம்பு இழுக்க நான் ஹீரோ ஆகப்போகிறேன் என்றேன். அதெல்லாம் வேணாம், உங்களுக்கு ஏன் இந்த வேலை, உங்களுக்கு காமெடி வருது. அதை பண்ணுங்க. டான்சர் சதீஷ் ஹீரோ ஆகட்டும். நீங்க அதில் காமெடி பண்ணுங்க ''' என்று அட்வைஸ் செய்தார். மீண்டும் அந்த அட்வைஸ் செய்து கொண்டே இருந்தார். காலங்கள் ஓடி நான் ஹீரோ ஆனபின், 4 ஆண்டுகள் ஆனபின் ' அன்னிக்கு நான் அப்படி பேசி இருக்க கூடாது என்றார். நான் அதை மறந்தே விட்டேன் என்றேன். அவருடன் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்தால் கராத்தே பழகுவது மாதிரி கத்துவார்.
இது 5வது படம் என்று சினிஷ் சொன்னபோது, இதற்குமுன்பு எடுத்த 4 படம் எது என்று இயக்குனர் நெல்சன் கலாய்த்தார். அவர் சினிமாவில் ரொம்ப நாளாக இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இருக்கிறார். அவர் பார்க்கிங் படத்துக்கு தேசிய விருது வாங்கிவிட்டார். அவர் உஷாரான ஆளு. சுதன் என்பவருடன் இணைந்து பார்க்கிங் படத்தை த யாரித்தார். அப்போது இந்த படத்துக்கு எந்த விருது வாங்கினாலும் நான்தான் வாங்குவேன் என்று அப்போதே ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். அப்ப, பண விஷயத்தில் எப்படிப்பட்ட ஆளுனு தெரிந்து கொள்ளுங்க. ஆனாலும், அவர் சினிமா பின்புலம் இல்லாமல், தனி ஆளாக சினிமாவில் ஜெயித்து இருக்கிறார். நிறைய நண்பர்கள் சம்பாதித்து வைத்து இருக்கிறார். இந்த படம் வெற்றி அடையும்' என்றார்.